எல்லோரா பகுதி 2. ராணி என்ன செய்தார்?
சென்ற பகுதியில் ராஷ்டிரகூட மன்னரின் மனைவி தன் கணவன் உடல்நலம் தேற சிவனை வேண்டினார் என்று பார்த்தோம்.
“சிவனே, என் கணவன் உடல் தேறினால் உனக்கு கோயில் கட்டுகிறேன். அது வரைக்கும் ஆகாரம் உட்கொள்ள மாட்டேன்” என்று வேண்டிக்கொண்டார்.
என்னவாயிற்று?
கடவுளை நம்பினார் கைவிடப்படார்.
ஆம், சிவனும் கைவிடவில்லை.
கணவன் உடல் நலம் சிறிது சிறிதாக தேறினார்..
கணவனிடம் விஷயத்தைக் கூறி கோயில் கட்ட ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார்.
கணவனிடம் ஒரு நிபந்தனை விதித்தார்.
“கோயில் கட்டி முடியும் ஆகாரம் உட்கொள்ள மாட்டேன்.”
மன்னரும் தான் ஆட்சி செய்யும் எல்லா இடங்களில் இருந்தும் நன்றாக கோயில் கட்டத் தெரிந்த கட்டிட வல்லுனர்களை வரவழைத்து மஹாரானியின் நிபந்தனையைக் கூறினார். எல்லோரும் ஏகமனதாக ,
“அரசே நீங்கள் வைத்துள்ள நிபந்தனை கடுமையானது. கோயிலைக் கட்ட நீண்ட வருஷங்கள் ஆகும். அதுவரை மஹாராணி உபவாசம் இருக்க முடியாது. எங்களால் கோயிலை எழுப்பமுடியாது” என்று கைவிரித்து விட்டனர்.
கடைசியாக” கொகாசா” என்ற மிகச் சிறந்த கட்டிட வல்லுனர்
“ஒரு யோசனை சொல்லுகிறேன். அதன் படி என்னிடம் உள்ள வல்லுனர்களைக் கொண்டு ஒரு வாரத்தில் கோபுரத்தை எழுப்பி விடுகிறேன். எந்த கோயிலுக்கும் கோபுரம் தான் முக்கியம். கோபுரத்தைப் பார்த்தாலே கோயிலைப் பார்த்த மாதிரி தான். அதன் மூலம் அரசியின் நிபந்தனை பூர்த்தியானதாகும். இதற்கு தாங்கள் சம்மதித்தால் இப்போதே வேலையைத் துவக்குகிறேன். ஒரு வாரத்துக்குள் கோபுரம் வந்துவிட நான் உறுதியளிக்கிறேன்” என்று மன்னரிடம் கூறினான்.
அரசருக்கோ சந்தேகம்!!!!!
“எல்லோரும் கட்டிடத்தை கீழிருந்து ஆரம்பித்துத் தானே மேலே போவார்கள். அப்படி இருக்கும் போது இவர் எப்படி ஒரு வாரத்துக்குள் கோபுரத்தை எழுப்புவார்”.
சந்தேகத்தை எப்படி 'கொசாகா', நிவர்த்தி செய்தான்?