செவ்வாய், 14 ஏப்ரல், 2020

பயண கட்டூரை கோலாப்பூர் பகுதி 3

பயண கட்டுரை கோலாப்பூர் பகுதி 3
https://www.mahalaxmikolhapur.com/gallery/shri-mahalaxmi-live-darshan.html
மேலே உள்ள தளத்தை சுட்டினால் மஹாலக்ஷ்மி தரிசனம் நேரடியாக கிடைக்கும் 
கோவில் வழிபாட்டு முறை.
ஒவ்வொரு நாளும் கோவிலில் ஐந்து விதமான சேவைகள் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன. முதல் சேவை விடியற்காலை 5 மணிக்கே தொடங்குவதாகும், அப்பொழுது ஒரு காக்கடா தீப்பந்தத்தை வைத்துக்கொண்டு, தெய்வீகப் பாடல்கள் பாடிக்கொண்டு, துயிலும் தேவியை எழுப்பும் சடங்காகும். இரண்டாவது சேவை, காலை 8 மணிக்கு, தேவிக்கு 16 மூலகங்கள் கொண்ட சோடோபசார பூஜைகள் செய்து வணங்குவதாகும்.
இதைத் தொடர்ந்து மதிய மற்றும் மாலை வேலை சேவைகள் நடைபெறும் மற்றும் இரவில் ஷேஜாரதி பூஜைகள் நடைபெறும்.
சிறப்பு நிகழ்ச்சிகள்.
தேவியின் உற்சவச்சிலை கோவில் பிரகாரத்தை சுற்றி ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும், பௌர்ணமி நாட்கள் அன்றும், மேள தாளங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பெறும்.
உற்சவம்.
.  அந்தக் காலத்தில் இந்த கோவிலை கட்டிய கட்டிடக் கலைஞர்கள் மிகவும் ஆச்சரியப்படும் வகையில் கோவிலை அமைத்துள்ளார்கள், சூரியனின் ஒளிக் கீற்றுக்கள் கொல்ஹாபூரில் அமைந்த மகாலக்ஷ்மியின் கோவிலில் அமைந்த ஒரு ஜன்னல் வழியாக தேவியின் பாதங்களை தொட்டு வணங்கி, பின்னர் மறைவது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும். இந்த சிறப்பு நிகழ்ச்சியை ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மக்கள் 'கிரண் உற்சவம்' என்ற உற்சவ தினங்களில் கண்டு களிக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் : 31 ஜனவரி, 1 பெப்ரவரி, 2 பெப்ரவரி, 9 நவம்பர், 10 நவம்பர், 11 நவம்பர் ஆகிய நாட்களில் மாலையில் இந்த விழா கொண்டாடுகிறார்கள்.
வருடத்தில் மூன்று நாட்கள் சூரியக் கடவுள் தேவி மகாலக்ஷ்மி அவர்களுக்கு மரியாதை வழங்குவதாக கூறப் படுகிறது. பொதுவாக இது ரத சப்தமி என்ற சடங்கை ஒட்டி வருவதாகும், இந்த பண்டிகை ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் வருகிறது. இது மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. முதல் நாளன்று, சூரியனின் கிரணங்கள் தேவியின் பாதத்திலும், இரண்டாம் நாளன்று தேவியின் இடைப் பாகத்திலும், மூன்றாம் நாள் தேவியின் முக மண்டலத்திலும் விழுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, இது போன்று இந்தக் கோவிலை கட்டிய கட்டிடக் கலைஞர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இவ்வாறு உருவாக்கியுள்ளார்கள், இது மிகவும் பெருமை சேர்ப்பதாகும், மேலும் இன்றும் நாம் அந்த அற்புதத்தை கண்டு களிக்கலாம்.
பிறகு, பேஷாவர் வம்சத்து ஆட்சியாளர்கள், இந்தக் கோவிலை பழுது பார்த்து புதுப்பித்தார்கள். இந்தக் கோவிலை சுற்றி பல அழகான சிற்பங்கள் உள்ளன, ஆனால் இந்தியாவில் இதை சார்ந்த இடங்களை பல மன்னர்கள் போர் தொடுத்து சூறையாடியதால், சில சிற்பங்கள் அதனால் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.
இவை விக்கிபீடீயா தமிழ் பதிப்பிலிருந்து எடுத்துள்ளேன். அவர்களுக்கு நன்றி.
இவ்வளவு சிறப்பு கொண்ட மஹாலக்ஷ்மியை தரிசிக்கத்தான் நீண்ட நாட்களாக தவமிருந்தோம்.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

பயணக்கட்டுரை பாகம் 2


கோலாப்பூர பத்தி ஏதோ சொல்லுவீங்கன்னு பாத்தா,  வேற எதையோ பத்தி எழுதிண்டு இருக்கானேன்னு நீஙக நினைக்கிறது காதுல விழறது.
விஷயத்துக்கு வந்துட்டேன்.
கோலாப்பூர்ன்னா அது மஹாலக்ஷ்மி கோயில் தாங்க. 
இந்து மத புராணங்களில் உரைத்துள்ள படி, இந்தியாவில் பற்பல இடங்களில் நிறுவியுள்ள சக்தி பீடங்களில் ஒன்றாகும்.
இந்து புராணங்களில் எழுதிய படி, சக்தி பீடம் என்பது சக்திக்கே உறைவிடமாக திகழும் தேவியான அம்மன் சக்தியுடன் தொடர்புடையதாகும். கோலாப்பூர் சக்தி பீடம் ஆனது இந்துக்களுக்கு ஒரு மிகவும் சிறப்புபெற்ற ஆறு சக்தி பீடங்களில் ஒன்றாகும், இந்த இடத்தின் சிறப்பு இங்கே ஒருவன் வந்து தேவி அன்னையை வழிபடுவதால் அவன் அவனுடைய விருப்பங்கள் அனைத்தையும் துறந்து இறைவனடி அடைந்து முக்தி பெறுவான் அல்லது அவனது அனைத்து விருப்பங்களையும் அன்னை நிறைவேற்றி வைப்பாள் என்று இந்துக்கள் நம்புவதேயாகும். இந்தக் கோவிலின் பெயர் திருமால் விஷ்ணுவின் மனைவியாக விளங்கும் மகாலக்ஷ்மியின் பெயரில் இருந்து வந்ததாகும், மேலும் இவ்விடத்தில் திருமால் அவருடைய தேவியுடன் வசிப்பதாக மக்கள் நம்புகிறார்கள்.
இந்த கோவில் கன்னடத்து சாளுக்கிய சாம்ராஜ்ஜிய மன்னர்கள் கி.பி. 700 ஆண்டுகளில் ஆட்சிபுரிந்த பொழுது, முதல் முதலாக கட்டிய கோவில்களில் ஒன்றாகும். கருங்கல்லில் அமைந்த ஒரு அடித்தளத்தின் மீது நான்கு கரங்களுடன் கூடிய மகுடம் தரித்த தேவியின் உருவச்சிலை நிறுவப் பெற்றுள்ளது, மேலும் இந்தச்சிலை மணிக்கற்ககளால் வடிவமைத்ததாகும் மேலும் அதன் எடை சுமார் 40 கிலோக்ராம் அளவாகும். மகாலக்ஷ்மியின் வடிவம் கறுப்புக் கல்லில் செதுக்கியதாகும் மேலும் அதன் உயரம் சுமார் மூன்று அடிகளாகும். இந்தக் கோவிலில் உள்ள ஒரு சுவரில் தேவியின் ஸ்ரீ யந்திரம் பொறித்துள்ளது. சிலையின் பின்னால் இறைவியின் வாகனம் ஆன ஒரு கல்லால் செதுக்கிய சிங்கத்தின் உருவச்சிலை நிலைகொண்டுள்ளது. மேலும் மகுடத்தில் இறைவன் விஷ்ணுவின் நாகப் பாம்பு — சேஷ நாகத்தின் உருவமும் செதுக்கப் பெற்றுள்ளது. தேவி மகாலக்ஷ்மியின் நான்கு கரங்களில் இந்துக்கள் புனிதமாகக் கருதும் பொருட்கள் இடம் பெறுகின்றன. கீழ் வலது கரத்தில் ஒரு கிச்சிலி பழத்தையும், வலது மேல் கரத்தில் ஒரு கௌமோதகி என்ற தண்டாயுதம் ஒன்றையும், அதன் தலை கீழே நிலத்தை தொட்டுள்ளபடி உள்ளது, இடது மேல் கரத்தில் ஒரு கேடகம் என்ற கவசத்தையும் மற்றும் கீழ் இடதுகரத்தில் ஒரு பானபாத்திரம் என்ற கிண்ணத்தையும் வைத்துக் காணப்படுகிறாள். இதர இந்து கோவில் சிலைகள் போல் அல்லாமல், அங்கெல்லாம் சிலைகள் வடக்கு அல்லது கிழக்கு முகமாக அமைந்திருக்கும், இங்கே இந்தக் கோவிலில் இந்த தேவியின் உருவச்சிலை மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. மேற்கு சுவர்ப்பகுதியில் ஒரு திறந்த ஜன்னல் அமைந்துள்ளது, அதன் வழியாக கதிரவனின் ஒளிக்கீற்று வருடத்தில் இரு முறை தேவியின் பாதங்களை தொட்டு திருமுகத்தை பளிச்சிடும், தோராயமாக மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் 21 தேதி வாக்கில் மூன்று நாட்களுக்கு இவ்வாறு ஆண்டு தோறும் நடைபெறும்.

இந்தக் கோவிலின் வெளிப் பிராகாரத்தில் நவக்கிரகங்கள், சூரியன், மகிஷாசுர மர்த்தினி, விட்டல்-ரக்மாயி, சிவர், விஷ்ணு, துளஜா பவானி மற்றும் பல இதர தைவங்களை வழிபடுவதற்கான தளங்களும் அமைந்துள்ளன. இவற்றில் சில சிலை வடிவங்கள் 11 ஆம் நூற்றாண்டை சார்ந்தவையாகும், மற்றும் சில சமீபத்தில் நிறுவியவை ஆகும். மேலும் இந்தக் கோவிலின் வளாகத்தில் மணிகர்ணிகா குண்டம் எனும் கோவில்-குளமும் உள்ளது, இந்தக் குளக்கரையில் விஷ்வேஷ்வர் மகாதேவருக்கான ஒரு கோவிலும் நிலை கொண்டுள்ளது
தொடருவோம் அடுத்த பகுதியில்.

சனி, 11 ஏப்ரல், 2020

பயணக் கட்டுரை

பயணக்கட்டுரை.  கோலாப்பூர் பாகம்  1. 
நானும் என் மனைவியும் சில மாதங்களுக்கு முன்னால் பெரிய லிஸ்டே வைத்துக்கொண்டு எந்தெந்த ஊர்களுக்கெல்லாம் போகலாம் என ப்ளான் செய்தோம். காரணமே  திருப்பதியில் எளிதில் கிடைக்காத சுப்ரபாத சேவை இருவருக்கும் கிடைத்தது தான். ( அது எப்படி கிடைத்தது  தனியாக எழுதுகிறேன்) .
அந்த லிஸ்டில் திருப்பதி,  வேலூர் தங்கக் கோயில்  கர்நாடகாவில் சில இடங்கள்,  மும்பை,  சீர்டி, எல்லோரா மற்றும் அஜந்தா, கோலாப்பூர் ஆகிய இடங்களை ஆகிய இடங்களைச் சுற்றிப்பார்த்தோம்.
கடைசியாக வந்த இடம் கோலாப்பூர். எங்களின் நீண்ட நாள்  கனவு இது. இங்க வருவதற்கு முன் மஹாரஷ்ட்ராவின் அவுரங்காபாத் ரயில் நிலையத்தில் முதல் நாள் காலை 9 மணிக்கு வண்டி..இந்த வண்டில என்ன விஷேஷம்ன்னா,இது மூணு நாளைக்கு முன்னால தன்பாத்திலிருந்து கிளம்பியும் அவுரங்காபாத்துக்கு சரியான நேரத்துக்கு வந்தது தான். இதவிட விஷேஷம்,  அடுத்த நாள் விடியற்காலை 3.45 மணிக்கு கோலாப்பூருக்கும் சரியான நேரத்துக்கு போனது தான்.
எதுக்கு அவுரங்காபாத் போனீங்க?  ஆமாம், அதப்பத்தி தனியாக எழுதப் போறேன். அப்ப காரணம் புரியும்.
அவுரங்காபாத் ஸ்டேஷனில் ஏறும் முன்னாலேயே என் மனைவிக்கு வயிறு பிரச்னை இருந்தது. மருந்தகம் எங்காவது இருக்கான்னு பாத்துண்டு தான் ஸ்டேஷனுக்கு  வந்தேன். மருந்துக்கடையெல்லாம் காலை10 மணிக்குத் தான் திறப்பார்களாம் . நல்ல வேளையாக நாங்க தங்கியிருந்த லாட்ஜ் உரிமையாளர்,  தன் வீட்ல ஒரு மாத்திரை மட்டும்தான் உள்ளது எனக் கொடுத்ததை  வைத்து ஓரளவு சமாளித்துக் கொண்டோம். 
இதவிட கொடுமை என்னன்னா, நாங்க வந்த ரெயிலில் ஆகார வசதியெல்லாம் இல்லை. வண்டியில வருவதையோ அல்லது பெரிய ஸ்டேஷனில் நிற்கும் போது கிடைத்ததை வாங்கி சாப்பிட வேண்டும்.அன்னைக்குன்னு பார்த்து ரெயிலில்  ஒரு ஆகாரம் கூட வரவில்லை. பகல் பூர முழுப்பட்டினி தான்.
நேரம் ஆகஆக மனைவிக்கு காலையில கொடுத்த. மாத்திரையின் வீர்யம்  குறைய ஆரம்பிக்கத் தொடங்கியது.நாங்க எங்க இருக்கோம் எனப் பார்த்தால் , இன்னும்  அரைமணியில் பூனாவை அடைவோம் என கைபேசி உணர்த்தியது. இரவு தாண்டணுமே எனக் கவலை. இந்தமாதிரி சமயத்தில் யாரிடம் உதவி கேட்கலாம் என யோசித்து, சென்னையில் உள்ள தம்பியைத் தொடர்பு கொண்டேன்.  அவன் உடனே 138 என்ற எண்ணைத் தொடர்பு கொள். அவர்களிடம் விஷயத்தை கூறு என்றான்.
அதே மாதிரி 138 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டவுடன், எல்லா விவரங்களையும் கேட்டு, PNR எண்ணையும் கேட்டு கவலைப்படாம இருக்கச் சொன்னார்கள். பூனா ஸ்டேஷன்  வந்ததும் எங்க போகியை விஜாரித்துக்கொண்டு ஒரு டாக்டர் வந்தார். தீர விஜாரித்து விட்டு மூன்று மாத்திரைகளையும் சக்கரை, உப்பு கலந்த பொடியைக் கொடுத்து, எல்லாம் சரியாகிவிடும் கவலைப்பட வேண்டாம் எனத் தைரியம் சொல்லிவிட்டு சென்றார். டாக்டருக்கு நன்றியைச் சொல்லிவிட்டு மாத்திரைகளை எடுத்துக் கொண்டார்கள் என் மனைவி. அன்று இரவு நிம்மதியாத் தூங்கினார்கள்.
ரயிலில் செல்லும் போது நாம எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டிய நம்பர்138. அவசரத்துக்கு உதவும் நண்பர்களே

திங்கள், 6 நவம்பர், 2017

AGOBILAM

செவ்வாய், 19 ஜூலை, 2011