பயணக்கட்டுரை. கோலாப்பூர் பாகம் 1.
நானும் என் மனைவியும் சில மாதங்களுக்கு முன்னால் பெரிய லிஸ்டே வைத்துக்கொண்டு எந்தெந்த ஊர்களுக்கெல்லாம் போகலாம் என ப்ளான் செய்தோம். காரணமே திருப்பதியில் எளிதில் கிடைக்காத சுப்ரபாத சேவை இருவருக்கும் கிடைத்தது தான். ( அது எப்படி கிடைத்தது தனியாக எழுதுகிறேன்) .
அந்த லிஸ்டில் திருப்பதி, வேலூர் தங்கக் கோயில் கர்நாடகாவில் சில இடங்கள், மும்பை, சீர்டி, எல்லோரா மற்றும் அஜந்தா, கோலாப்பூர் ஆகிய இடங்களை ஆகிய இடங்களைச் சுற்றிப்பார்த்தோம்.
கடைசியாக வந்த இடம் கோலாப்பூர். எங்களின் நீண்ட நாள் கனவு இது. இங்க வருவதற்கு முன் மஹாரஷ்ட்ராவின் அவுரங்காபாத் ரயில் நிலையத்தில் முதல் நாள் காலை 9 மணிக்கு வண்டி..இந்த வண்டில என்ன விஷேஷம்ன்னா,இது மூணு நாளைக்கு முன்னால தன்பாத்திலிருந்து கிளம்பியும் அவுரங்காபாத்துக்கு சரியான நேரத்துக்கு வந்தது தான். இதவிட விஷேஷம், அடுத்த நாள் விடியற்காலை 3.45 மணிக்கு கோலாப்பூருக்கும் சரியான நேரத்துக்கு போனது தான்.
எதுக்கு அவுரங்காபாத் போனீங்க? ஆமாம், அதப்பத்தி தனியாக எழுதப் போறேன். அப்ப காரணம் புரியும்.
அவுரங்காபாத் ஸ்டேஷனில் ஏறும் முன்னாலேயே என் மனைவிக்கு வயிறு பிரச்னை இருந்தது. மருந்தகம் எங்காவது இருக்கான்னு பாத்துண்டு தான் ஸ்டேஷனுக்கு வந்தேன். மருந்துக்கடையெல்லாம் காலை10 மணிக்குத் தான் திறப்பார்களாம் . நல்ல வேளையாக நாங்க தங்கியிருந்த லாட்ஜ் உரிமையாளர், தன் வீட்ல ஒரு மாத்திரை மட்டும்தான் உள்ளது எனக் கொடுத்ததை வைத்து ஓரளவு சமாளித்துக் கொண்டோம்.
இதவிட கொடுமை என்னன்னா, நாங்க வந்த ரெயிலில் ஆகார வசதியெல்லாம் இல்லை. வண்டியில வருவதையோ அல்லது பெரிய ஸ்டேஷனில் நிற்கும் போது கிடைத்ததை வாங்கி சாப்பிட வேண்டும்.அன்னைக்குன்னு பார்த்து ரெயிலில் ஒரு ஆகாரம் கூட வரவில்லை. பகல் பூர முழுப்பட்டினி தான்.
நேரம் ஆகஆக மனைவிக்கு காலையில கொடுத்த. மாத்திரையின் வீர்யம் குறைய ஆரம்பிக்கத் தொடங்கியது.நாங்க எங்க இருக்கோம் எனப் பார்த்தால் , இன்னும் அரைமணியில் பூனாவை அடைவோம் என கைபேசி உணர்த்தியது. இரவு தாண்டணுமே எனக் கவலை. இந்தமாதிரி சமயத்தில் யாரிடம் உதவி கேட்கலாம் என யோசித்து, சென்னையில் உள்ள தம்பியைத் தொடர்பு கொண்டேன். அவன் உடனே 138 என்ற எண்ணைத் தொடர்பு கொள். அவர்களிடம் விஷயத்தை கூறு என்றான்.
அதே மாதிரி 138 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டவுடன், எல்லா விவரங்களையும் கேட்டு, PNR எண்ணையும் கேட்டு கவலைப்படாம இருக்கச் சொன்னார்கள். பூனா ஸ்டேஷன் வந்ததும் எங்க போகியை விஜாரித்துக்கொண்டு ஒரு டாக்டர் வந்தார். தீர விஜாரித்து விட்டு மூன்று மாத்திரைகளையும் சக்கரை, உப்பு கலந்த பொடியைக் கொடுத்து, எல்லாம் சரியாகிவிடும் கவலைப்பட வேண்டாம் எனத் தைரியம் சொல்லிவிட்டு சென்றார். டாக்டருக்கு நன்றியைச் சொல்லிவிட்டு மாத்திரைகளை எடுத்துக் கொண்டார்கள் என் மனைவி. அன்று இரவு நிம்மதியாத் தூங்கினார்கள்.
ரயிலில் செல்லும் போது நாம எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டிய நம்பர்138. அவசரத்துக்கு உதவும் நண்பர்களே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக