புதன், 29 ஏப்ரல், 2020

பயணக் கட்டுரை கோலாப்பூர் பகுதி 8

நாம இப்ப ஜோதிபா டெம்பிள் போகப் போறோம். அது இங்கிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மலை மேல் உள்ளது என அவருக்கு தெரிந்த தமிழில் சொல்ல நாங்க புரிந்து கொண்டோம். மும்மூர்த்திகளுக்குமான இடம் இது.நாங்க போயிருந்த. போது சிலை ரூபத்துக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள். நீண்ட நேரம் தரிசனம் செய்த பிறகு அவரைப் படம் பிடித்துக்கொண்டோம். 
ஹோலிக்கு பயன்படுத்தப்படும் குங்குமம் கோவில் முழுவதும்  சிந்தியிருக்கிறது. ராணோஜி ஷிண்டே என்பவர் 1730 ளில் இந்தக் கோவிலை கட்டியிருப்பார் என்கிறார்கள். கோவிலுக்கு செல்லும் இரு பக்கங்களிலும் நிறைய கடைகள் உள்ளன. சித்திரை மாசம் கோவிலில் விஷேஷம் நடைபெறும் என்கிறார்கள்.
அங்கேயே மக்களை கவர பசு ஒன்று பால் தறுவது போல அமைத்துள்ளார்கள்.பாலுக்குப் பதிலாக மடியில் இருந்து தண்ணீர் தான்  வருகிறது. கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் இருந்து சேவித்தோம். அங்கிருந்து அடுத்து நாங்க சென்ற இடம் பன்ஹாலா ஃபோர்ட் என்ற கோட்டை. அதைப் பற்றி அடுத்து பார்ப்போம்.


 

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

பயணக் கட்டுரை கோலாப்பூர் பகுதி 7


என்ன ஷாக்ன்னு கேட்குறீங்களா?
இல்லையா பின்ன, ஆட்டோ நண்பர் லாட்ஜ் வாசல்ல இன்னொரு கோஷ்டியோட பேசிகிட்டு இருக்கார். எங்கள பாத்தவுடன் “ வாங்க சார் உங்கள. ரண்கலா லேக்ல கொண்டு விட்டுறேன். அப்புறம் இவங்களோட பேசிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு எங்க பதிலுக்கு வெயிட் பண்ணாம ஏறச்சொன்னார். நாங்களும் ஏதோ காரியம் ஆனா சரி, இன்னொரு இடத்தையும் பாத்த மாதிரி இருக்கும்ன்னு  ஏறி உக்காந்தோம். ரெண்டு நிமிஷத்துல வந்துட்டது. லேக். ஆமா, நாங்க தங்கிய லாட்ஜ் ஒரு பக்கம் கோவில் மறுபக்கம் லேக்.  ஏமாத்துறாங்க பாருங்க. 
சரி லேக்க பாப்போம்ன்னு இறங்கி பாக்கிறதுக்குள்ள ஆள் அப்ஸ்காண்டிங். ஒண்ணுமில்ல லேக். அந்த ஊர்க்காரங்க காலைல வாக் போற இடம்  அவ்வளவுதான்.  ஒரு போட்டோ எடுத்துக்கொண்டு நண்பருக்கு போன் செய்தோம்.
  பதில் இல்லை. இதுக்கு நடுவில பக்கத்துல இருந்த ஆட்டோ டிரைவரிடம் நாங்க பாக்க வேண்டிய லிஸ்ட கொடுத்து இதெல்லாம் பாக்க எவ்வளோ ஆகும் எனக் கேட்டோம்.
Mahalaxmi Temple
Rankala Lake
Chhatrapati Shahu Museum
Maharaja’s Palace
Kopeshwar Temple
Binkhambi Ganesh Temple
Jyotiba Temple
Bhavani Mandap
Panhala Fort  இதுதான் நாங்க கோலாப்பூர்ல பாக்க வேண்டிய இடங்கள்.  இதுல கோபேஷ்வர் 80 கிலோமீட்டர் தொலைவு. அதுக்கு ஒரு நாள் ஆகும். மற்றவைகள் மட்டும்ன்னா 500 கொடுங்க”, என்றார். நாங்க 800 பேசி,ஏமாந்து இருக்கோம். இதுல வேடிக்கை  என்னன்னா சில இடங்கள் வெகு அருகாமையில் உள்ளவை. சரி போனது போகட்டும், ஆட்டோ நண்பர் வந்தவுடன் மற்ற எல்லா இடங்களையும் பார்த்து விடுவோம் என நினைத்து,லாட்ஜ் நோக்கி நடக்கலானோம்.  பாதி வழியிலேயே ஒரு பைக்,ஆட்டோ  என இரண்டும் வந்தன. பைக்கில் ஆட்டோ நண்பர் . “ சாரி சார், இனிமேல் இது மாதிரி நடக்காது. இந்த ஆட்டோவில் என் தந்தை உள்ளார். அவர் இனி எல்லா இடங்களையும் தொடர்ந்து காண்பிப்பார்” என்று கூறி அந்த ஆட்டோவில் ஏற்றி விட்டு அவரிடமும் ஏதோ சொல்லி  எங்களைக் கிளப்பி விட்டார்.

வியாழன், 23 ஏப்ரல், 2020

பயணக் கட்டுரை கோலாப்பூர் பகுதி 6

மொத்தமா வாடகையை வாங்கிக் கொண்டு அறைச் சாவியை எங்களிடம் கொடுத்தார் வீட்டு ஒனர். மணி 4.15. விட்டால் போதும் என்றாகியது. ஆட்டோ நண்பர், அப்போதைக்கு மட்டும், “ சரி சார் நீஙக ரெஸ்ட் எடுத்துக்கங்க, நான் 7 மணிக்கு வந்து எல்லா இடங்களையும் காண்பிக்கிறேன். அப்போ வாடகையை வாங்கிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு சிட்டாகப் பறந்தார். வென்னீர் 6 மணிக்குத் தான் வரும் எனச் சொன்னதால், அலாரத்தை வைத்துவிட்டு தூங்கினோம்.
கோலாப்பூர் விழித்தது, நாங்களும் தான். வாசலில் ஏதோ சப்தம்  வருதே என்று கதவைத் திறந்து பாத்தா, நம்ம நண்பர், அதாங்க ஆட்டோ நண்பர் இன்னொரு கூட்டத்தை ரயில் நிலையத்தில் இருந்து லாட்ஜ்க்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தார். அப்பத் தான் பொறி தட்டியது.(!!!!!!!!)
“என்ன சார் 7 மணிக்கு வந்துடுவா” என்றார். “சரி வந்திடுங்க” என்று கூறிவிட்டு காலைக்கடன் கழிக்கச் சென்றேன். எல்லா வேலைகளையும் முடித்து விட்டு, சுமார் 7 மணி இருக்கும், கோவிலுக்கு முதலில் போய்விட்டு வந்துவிடுவோம் என்று நினைத்த மாத்திரத்தில், கதவைத் திறந்தோம். அதுக்கு முன்னால இந்த ஊர்ல எதெல்லாம் முக்கியம் என்று ஓரு லிஸ்ட் தயார் செய்து வைத்து இருந்தோம். இவற்றை ஆட்டோ நண்பரை வச்சுண்டு பாத்துடலாம் என்று  தீர்மானித்தோம்.
கதவைத் திறந்தால் ஆட்டோ நண்பர். அவரிடம் லிஸ்ட காண்பித்து இவைகளை எல்லாம் பாக்க எவ்வளவு ஆகும் என வினவினோம்.இதற்குள் ஆர்டர் செய்த காபி (ஆறின காபி தான்) வர, நாங்க கொடுத்த லிஸ்ட் பாத்துட்டு எல்லாத்தையும் காண்பிக்கிறேன் சார். லிஸ்டுல சில இல்லை அவற்றையும் காண்பிக்கிறேன். 1000 ரூபாய் கொடுத்து விடுங்க என்றார். நமக்குத் தான் பேரம் பேசியே பழக்கமா, அதெல்லாம் இல்லை 700 கொடுக்கிறோம் என்றோம். இருவருக்கும் பேச்சுவார்த்தை முடிவில் 800க்கு ஓத்துக் கொண்டார்.”ஏறிக்ங்க, கோவில்ல கொண்டு விடுகிறேன்” ஏறி உட்காரத் தான் நேரம் ஆச்சு.” கோவில் வந்து விட்டது. கோவில நன்னா சுத்திப் பாருங்க “என்றார் இவ்வளவு கிடடத் தான் கோவிலா?என்று எங்களுக்குள் வினவிக்கொண்டே கோவில் லாசலைநோக்கி நகர்ந்தோம்.
ஆம், நாங்க தங்கியிருந்த இடத்தில் இருந்து நடக்கற தொலைவில் தான் கோவில். கோவிலுக்கு நான்கு பக்கமும் வாசல்.நாங்க நுழைந்த வாசலில் நிறைய கடைகள். நம்ம ஊர்ல இருக்கிற மாதிரி  ராஜகோபுரம் இல்லை. உள்ளே நுழையும் போதே ஸீமஹாலக்ஷ்மி தரிசனம் தெரியுற மாதிரியா அம்மள் தரிசனம் எல்லோருக்கும்  கிடைக்கிறது. சின்னகோவில் தான்.  நாங்க போன. தினம் வேலைநாளா இருந்ததாலே அதிகமா கூட்டம் இல்லை. வரிசையும் அதிகமா இல்லாததால வேகமா முன்னேறிச் சென்று தேவியின் தரிசனம் கிடைத்தது. நாம பாத்துக்கொண்டிருக்கும் போதே அம்மனுக்கு வேண்டிக்கொண்டு புடவை வாங்கி கொடுத்தவர்களிடம் இருந்து புடவையை அம்மனுக்கு அணிவிக்கிறார்கள்.சில நொடிகளில் அணிவித்து பிரசாதம் கொடுத்து விடுகிறார்கள். பக்தர்கள் நீண்ட நேரமா நிற்பதில்லை. அம்மனை சுற்றிவர ஏதுவாக கோவில் எண்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. நாங்க நீண்ட நேரமா நின்னாக் கூட யாருமே போங்கன்னு விரட்ல. பிரதக்ஷ்ணமா வந்தோம். நிறைய சன்னதிகள், எல்லாவற்றையும் சேவித்துக் கொண்டோம். அருகிருந்து சேவிக்க, கொஞ்சம் தள்ளி நின்னு சேவிக்க என நல்ல ஏற்பாடு செய்துள்ளார்கள்.கோவிலுக்கு உள்ளேயே விளக்கேற்ற நிறைய. தூண்கள் பிரம்மாண்டமமா உள்ளன.
ரொம்ப நாழிகை இங்கேயே இருந்தால் மற்றவகைகளை பாக்க முடியாக போய்விடும் என்று தீர்மானித்து வெளியே வந்து ஆட்டோ நண்பனை தேடினோம். ஹும், எங்கும் காணவில்லை. போன் பண்ணேன்,  “இதோ வந்துட்டேன் சார். அதுக்குள்ளே காலை டிபன் முடித்து விடுங்க “என்றார். ரோட்டுலேயே நன்கு அலங்கரித்துக் கொண்டு பெண்கள் அவர்கள் குழந்தைகள் புடை சூழ டிபள் சுடச்சுட வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். விலையும் குறைவாக இருந்ததால் டிபனை முடித்துக்கொண்டோம்.ஆட்டோ நண்பர் வர வழியாக தெரியாததாலும் அறை அருகில் தானே அறையை நோக்கி நடக்கலானோம். லாட்ஜ் வாசலில் பாத்தால் ஷாக்!!!!!

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

பயணக் கட்டுரை கோலாப்பூர் பகுதி 5

பெட்டியை தள்ளிண்டு வெயிட்டிங் அறை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருந்தோம். “வாங்க சார், ஆட்டோல கோலாப்பூர் கூட்டிண்டு போறேன். யாத்ரி நிவாஸுக்கு அழைத்து செல்கிறேன். கோவிலைச் சேர்ந்தவங்கதான் நடத்தறாங்க. ஆட்டோவுக்கு 60 ரூபா கொடுங்க “ என்று தமிழிலும் மராட்டியத்திலுமாக பேசி ஓரு ஆட்டோ ஒட்டுனர் ஆசை வார்த்தைகனக் கூற நாங்களும் மயங்கி ஆட்டோவில் எறினோம். போறபோதே நான் எல்லா இடங்களுக்கும் கூட்டிக்கொண்டு போகிறேன். நிறைய இடம் பாக்க இருக்கு சார்” என சொல்லிக்கொண்டு வந்தார்  ஓட்டுநர். கடைசியா ஓரு வீட்டு வாசல்ல கொண்டு போய் நிறுத்தி  இது தான் யாத்ரி நிவாஸ், இறங்குங்க சார் என்றார் ஆட்டோ ஒட்டுநர்.
“என்னப்பா யாத்ரி நிவாஸ்ன்னு சொல்லிட்டு, வீட்டுல கொண்டு வந்துருக்கே” என்றோம். வீட்டு வாசல்ல போர்டு பாருங்க சார் என்றானே பாக்கணும். ஆமாம்,  நீங்களும் பாருங்க. 

அந்த வீதியில் எல்லா வீடுகளையும் லாட்ஜா மாத்தியிருக்காங்க. படுத்துக்க கட்டில், பாத்ரூம், லெட்ரின் என பேசிக்கான ஐட்டங்களை வைத்து ரூமா மாத்திட்டாங்க.  என்ன வாடகைன்னு விஜாரித்தோம் .”800 ரூபாய் வாடகை. எத்தன நாள் தங்கப் போறீங்க எல்லா நாளுக்கும் சேர்த்து மொத்தமா வாடகை முன்னாலயே கொடுக்கணும் “
அப்பவாவது ஆட்டோ டிரைவரப்பத்தி சுதாரிச்சுண்டு இருக்கணும். இன்னும் எப்படி ஏமாந்தோம்ன்னு பாருங்க.
 நான் இந்த மாதிரி கோவில்களுக்குப் போகும் போதெல்லாம் அந்த கோவில் ஆட்சியாளர்கள் ஏதாவது தங்கும் விடுதிகள் நடத்துகிறார்களா, முன் பதிவு செய்யமுடியுமா என்பதையெல்லாம் முன்னாலேயே பார்ப்பவன் தான். அப்படிப்பார்த்தபோது கோவில் நிர்வாகம் நடத்துவதை பார்த்து இருந்தேன். ஆனால் முன் பதிவு செய்யமுடியாது என்று சொல்லியது. எனவே ஆட்டோ டிரைவர் யாத்ரி நிவாஸில் கொண்டு விடுகிறேன் என்றவுடன் மயங்கி விட்டேன்.
ஆனால் கோலாப்பூர் கோவில் நிர்வாகம்  தங்கும் விடுதி நடத்துகிறது. அதன் அட்ரஸ் அறை வாடகை போன்றவற்றை உங்களுக்காக கீழே கொடுத்துள்ளேன். யாருக்காவது பயன்படும். தனிநபர், அல்லது குரூப்பா செல்பவர்கள் கூட கோலாப்பூர் போய்ச் சேர்ந்த பிறகு அறைகளை வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம்.
கோவிலில் இருந்து அருகில் தான் உள்ளது.  நடந்து போய்விடலாம். 

அறை கூட கோவிலில் இருந்து அருகில் தான் உள்ளது. இதை நாங்க நன்றாக ஏமாந்த பிறகு மறுநாள் மாலை தான் பார்த்தோம்.
வேறே எப்படி சார் ஏமாந்தீங்க.  கேட்பது காதுல விழறது. 
தொடர்ந்து படிச்சீங்கன்னா உங்களுக்கே தெரியும்.

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

பயணக் கட்டுரை கோலாப்பூர் பகுதி 4


அவுரங்காபாத் ஸ்டேஷனில் முதநாள் காலை 9 மணிக்கு ஏறின நாங்க இதோ இன்னும் கொஞ்ச நேரம், அதாங்க மறுநாள் விடியற்காலை 3.45 மணிக்கு கோலாப்பூர் இறங்கப்போறோம். தலையணை போர்வை ஆகியவற்றை வாங்கி கொள்ளும் பையன்' சார் கோலாப்பூர் வரப்போறது, ரெடி ஆகுங்க. “ என அவன் பாஷையில சொன்னான். அப்பிடின்னு நாங்க நினைச்சுண்டு, எங்க பாஷையில, “எப்படிப்பா ஸ்டேஷன் வெளில போறது” என்று கேட்டோம். அவன் “ முன்னால போங்க, வெயிடிங் ரூம் வரும். விடியற வரை இருந்துட்டு அப்பறமா ஆட்டோ வச்சுண்டு டவுனுக்கு போங்க” என்று பதில சொல்லியிருப்பான்னு வச்சுண்டு நாங்களா ஒரு அனுமானத்துல வெயிட்டிங் ரும நோக்கி நகரத் தொடங்கினோம்.
விதி ஒரு ஆட்டோ பையன் ரூபத்துல வந்து நாம ஏமாறப்போறோம்ன்னு அடுத்த நாள் ஊர விட்டு கிளம்பற போதுதான் எங்களுக்கே தெரிஞ்சுது.
என்ன விதி, என்ன ஆச்சுன்னு கேக்கிறீங்களா? பொறுத்துங்க. நாளைக்குத் தெரியும்.

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

பயண கட்டூரை கோலாப்பூர் பகுதி 3

பயண கட்டுரை கோலாப்பூர் பகுதி 3
https://www.mahalaxmikolhapur.com/gallery/shri-mahalaxmi-live-darshan.html
மேலே உள்ள தளத்தை சுட்டினால் மஹாலக்ஷ்மி தரிசனம் நேரடியாக கிடைக்கும் 
கோவில் வழிபாட்டு முறை.
ஒவ்வொரு நாளும் கோவிலில் ஐந்து விதமான சேவைகள் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன. முதல் சேவை விடியற்காலை 5 மணிக்கே தொடங்குவதாகும், அப்பொழுது ஒரு காக்கடா தீப்பந்தத்தை வைத்துக்கொண்டு, தெய்வீகப் பாடல்கள் பாடிக்கொண்டு, துயிலும் தேவியை எழுப்பும் சடங்காகும். இரண்டாவது சேவை, காலை 8 மணிக்கு, தேவிக்கு 16 மூலகங்கள் கொண்ட சோடோபசார பூஜைகள் செய்து வணங்குவதாகும்.
இதைத் தொடர்ந்து மதிய மற்றும் மாலை வேலை சேவைகள் நடைபெறும் மற்றும் இரவில் ஷேஜாரதி பூஜைகள் நடைபெறும்.
சிறப்பு நிகழ்ச்சிகள்.
தேவியின் உற்சவச்சிலை கோவில் பிரகாரத்தை சுற்றி ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும், பௌர்ணமி நாட்கள் அன்றும், மேள தாளங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பெறும்.
உற்சவம்.
.  அந்தக் காலத்தில் இந்த கோவிலை கட்டிய கட்டிடக் கலைஞர்கள் மிகவும் ஆச்சரியப்படும் வகையில் கோவிலை அமைத்துள்ளார்கள், சூரியனின் ஒளிக் கீற்றுக்கள் கொல்ஹாபூரில் அமைந்த மகாலக்ஷ்மியின் கோவிலில் அமைந்த ஒரு ஜன்னல் வழியாக தேவியின் பாதங்களை தொட்டு வணங்கி, பின்னர் மறைவது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும். இந்த சிறப்பு நிகழ்ச்சியை ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மக்கள் 'கிரண் உற்சவம்' என்ற உற்சவ தினங்களில் கண்டு களிக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் : 31 ஜனவரி, 1 பெப்ரவரி, 2 பெப்ரவரி, 9 நவம்பர், 10 நவம்பர், 11 நவம்பர் ஆகிய நாட்களில் மாலையில் இந்த விழா கொண்டாடுகிறார்கள்.
வருடத்தில் மூன்று நாட்கள் சூரியக் கடவுள் தேவி மகாலக்ஷ்மி அவர்களுக்கு மரியாதை வழங்குவதாக கூறப் படுகிறது. பொதுவாக இது ரத சப்தமி என்ற சடங்கை ஒட்டி வருவதாகும், இந்த பண்டிகை ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் வருகிறது. இது மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. முதல் நாளன்று, சூரியனின் கிரணங்கள் தேவியின் பாதத்திலும், இரண்டாம் நாளன்று தேவியின் இடைப் பாகத்திலும், மூன்றாம் நாள் தேவியின் முக மண்டலத்திலும் விழுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, இது போன்று இந்தக் கோவிலை கட்டிய கட்டிடக் கலைஞர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இவ்வாறு உருவாக்கியுள்ளார்கள், இது மிகவும் பெருமை சேர்ப்பதாகும், மேலும் இன்றும் நாம் அந்த அற்புதத்தை கண்டு களிக்கலாம்.
பிறகு, பேஷாவர் வம்சத்து ஆட்சியாளர்கள், இந்தக் கோவிலை பழுது பார்த்து புதுப்பித்தார்கள். இந்தக் கோவிலை சுற்றி பல அழகான சிற்பங்கள் உள்ளன, ஆனால் இந்தியாவில் இதை சார்ந்த இடங்களை பல மன்னர்கள் போர் தொடுத்து சூறையாடியதால், சில சிற்பங்கள் அதனால் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.
இவை விக்கிபீடீயா தமிழ் பதிப்பிலிருந்து எடுத்துள்ளேன். அவர்களுக்கு நன்றி.
இவ்வளவு சிறப்பு கொண்ட மஹாலக்ஷ்மியை தரிசிக்கத்தான் நீண்ட நாட்களாக தவமிருந்தோம்.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

பயணக்கட்டுரை பாகம் 2


கோலாப்பூர பத்தி ஏதோ சொல்லுவீங்கன்னு பாத்தா,  வேற எதையோ பத்தி எழுதிண்டு இருக்கானேன்னு நீஙக நினைக்கிறது காதுல விழறது.
விஷயத்துக்கு வந்துட்டேன்.
கோலாப்பூர்ன்னா அது மஹாலக்ஷ்மி கோயில் தாங்க. 
இந்து மத புராணங்களில் உரைத்துள்ள படி, இந்தியாவில் பற்பல இடங்களில் நிறுவியுள்ள சக்தி பீடங்களில் ஒன்றாகும்.
இந்து புராணங்களில் எழுதிய படி, சக்தி பீடம் என்பது சக்திக்கே உறைவிடமாக திகழும் தேவியான அம்மன் சக்தியுடன் தொடர்புடையதாகும். கோலாப்பூர் சக்தி பீடம் ஆனது இந்துக்களுக்கு ஒரு மிகவும் சிறப்புபெற்ற ஆறு சக்தி பீடங்களில் ஒன்றாகும், இந்த இடத்தின் சிறப்பு இங்கே ஒருவன் வந்து தேவி அன்னையை வழிபடுவதால் அவன் அவனுடைய விருப்பங்கள் அனைத்தையும் துறந்து இறைவனடி அடைந்து முக்தி பெறுவான் அல்லது அவனது அனைத்து விருப்பங்களையும் அன்னை நிறைவேற்றி வைப்பாள் என்று இந்துக்கள் நம்புவதேயாகும். இந்தக் கோவிலின் பெயர் திருமால் விஷ்ணுவின் மனைவியாக விளங்கும் மகாலக்ஷ்மியின் பெயரில் இருந்து வந்ததாகும், மேலும் இவ்விடத்தில் திருமால் அவருடைய தேவியுடன் வசிப்பதாக மக்கள் நம்புகிறார்கள்.
இந்த கோவில் கன்னடத்து சாளுக்கிய சாம்ராஜ்ஜிய மன்னர்கள் கி.பி. 700 ஆண்டுகளில் ஆட்சிபுரிந்த பொழுது, முதல் முதலாக கட்டிய கோவில்களில் ஒன்றாகும். கருங்கல்லில் அமைந்த ஒரு அடித்தளத்தின் மீது நான்கு கரங்களுடன் கூடிய மகுடம் தரித்த தேவியின் உருவச்சிலை நிறுவப் பெற்றுள்ளது, மேலும் இந்தச்சிலை மணிக்கற்ககளால் வடிவமைத்ததாகும் மேலும் அதன் எடை சுமார் 40 கிலோக்ராம் அளவாகும். மகாலக்ஷ்மியின் வடிவம் கறுப்புக் கல்லில் செதுக்கியதாகும் மேலும் அதன் உயரம் சுமார் மூன்று அடிகளாகும். இந்தக் கோவிலில் உள்ள ஒரு சுவரில் தேவியின் ஸ்ரீ யந்திரம் பொறித்துள்ளது. சிலையின் பின்னால் இறைவியின் வாகனம் ஆன ஒரு கல்லால் செதுக்கிய சிங்கத்தின் உருவச்சிலை நிலைகொண்டுள்ளது. மேலும் மகுடத்தில் இறைவன் விஷ்ணுவின் நாகப் பாம்பு — சேஷ நாகத்தின் உருவமும் செதுக்கப் பெற்றுள்ளது. தேவி மகாலக்ஷ்மியின் நான்கு கரங்களில் இந்துக்கள் புனிதமாகக் கருதும் பொருட்கள் இடம் பெறுகின்றன. கீழ் வலது கரத்தில் ஒரு கிச்சிலி பழத்தையும், வலது மேல் கரத்தில் ஒரு கௌமோதகி என்ற தண்டாயுதம் ஒன்றையும், அதன் தலை கீழே நிலத்தை தொட்டுள்ளபடி உள்ளது, இடது மேல் கரத்தில் ஒரு கேடகம் என்ற கவசத்தையும் மற்றும் கீழ் இடதுகரத்தில் ஒரு பானபாத்திரம் என்ற கிண்ணத்தையும் வைத்துக் காணப்படுகிறாள். இதர இந்து கோவில் சிலைகள் போல் அல்லாமல், அங்கெல்லாம் சிலைகள் வடக்கு அல்லது கிழக்கு முகமாக அமைந்திருக்கும், இங்கே இந்தக் கோவிலில் இந்த தேவியின் உருவச்சிலை மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. மேற்கு சுவர்ப்பகுதியில் ஒரு திறந்த ஜன்னல் அமைந்துள்ளது, அதன் வழியாக கதிரவனின் ஒளிக்கீற்று வருடத்தில் இரு முறை தேவியின் பாதங்களை தொட்டு திருமுகத்தை பளிச்சிடும், தோராயமாக மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் 21 தேதி வாக்கில் மூன்று நாட்களுக்கு இவ்வாறு ஆண்டு தோறும் நடைபெறும்.

இந்தக் கோவிலின் வெளிப் பிராகாரத்தில் நவக்கிரகங்கள், சூரியன், மகிஷாசுர மர்த்தினி, விட்டல்-ரக்மாயி, சிவர், விஷ்ணு, துளஜா பவானி மற்றும் பல இதர தைவங்களை வழிபடுவதற்கான தளங்களும் அமைந்துள்ளன. இவற்றில் சில சிலை வடிவங்கள் 11 ஆம் நூற்றாண்டை சார்ந்தவையாகும், மற்றும் சில சமீபத்தில் நிறுவியவை ஆகும். மேலும் இந்தக் கோவிலின் வளாகத்தில் மணிகர்ணிகா குண்டம் எனும் கோவில்-குளமும் உள்ளது, இந்தக் குளக்கரையில் விஷ்வேஷ்வர் மகாதேவருக்கான ஒரு கோவிலும் நிலை கொண்டுள்ளது
தொடருவோம் அடுத்த பகுதியில்.

சனி, 11 ஏப்ரல், 2020

பயணக் கட்டுரை

பயணக்கட்டுரை.  கோலாப்பூர் பாகம்  1. 
நானும் என் மனைவியும் சில மாதங்களுக்கு முன்னால் பெரிய லிஸ்டே வைத்துக்கொண்டு எந்தெந்த ஊர்களுக்கெல்லாம் போகலாம் என ப்ளான் செய்தோம். காரணமே  திருப்பதியில் எளிதில் கிடைக்காத சுப்ரபாத சேவை இருவருக்கும் கிடைத்தது தான். ( அது எப்படி கிடைத்தது  தனியாக எழுதுகிறேன்) .
அந்த லிஸ்டில் திருப்பதி,  வேலூர் தங்கக் கோயில்  கர்நாடகாவில் சில இடங்கள்,  மும்பை,  சீர்டி, எல்லோரா மற்றும் அஜந்தா, கோலாப்பூர் ஆகிய இடங்களை ஆகிய இடங்களைச் சுற்றிப்பார்த்தோம்.
கடைசியாக வந்த இடம் கோலாப்பூர். எங்களின் நீண்ட நாள்  கனவு இது. இங்க வருவதற்கு முன் மஹாரஷ்ட்ராவின் அவுரங்காபாத் ரயில் நிலையத்தில் முதல் நாள் காலை 9 மணிக்கு வண்டி..இந்த வண்டில என்ன விஷேஷம்ன்னா,இது மூணு நாளைக்கு முன்னால தன்பாத்திலிருந்து கிளம்பியும் அவுரங்காபாத்துக்கு சரியான நேரத்துக்கு வந்தது தான். இதவிட விஷேஷம்,  அடுத்த நாள் விடியற்காலை 3.45 மணிக்கு கோலாப்பூருக்கும் சரியான நேரத்துக்கு போனது தான்.
எதுக்கு அவுரங்காபாத் போனீங்க?  ஆமாம், அதப்பத்தி தனியாக எழுதப் போறேன். அப்ப காரணம் புரியும்.
அவுரங்காபாத் ஸ்டேஷனில் ஏறும் முன்னாலேயே என் மனைவிக்கு வயிறு பிரச்னை இருந்தது. மருந்தகம் எங்காவது இருக்கான்னு பாத்துண்டு தான் ஸ்டேஷனுக்கு  வந்தேன். மருந்துக்கடையெல்லாம் காலை10 மணிக்குத் தான் திறப்பார்களாம் . நல்ல வேளையாக நாங்க தங்கியிருந்த லாட்ஜ் உரிமையாளர்,  தன் வீட்ல ஒரு மாத்திரை மட்டும்தான் உள்ளது எனக் கொடுத்ததை  வைத்து ஓரளவு சமாளித்துக் கொண்டோம். 
இதவிட கொடுமை என்னன்னா, நாங்க வந்த ரெயிலில் ஆகார வசதியெல்லாம் இல்லை. வண்டியில வருவதையோ அல்லது பெரிய ஸ்டேஷனில் நிற்கும் போது கிடைத்ததை வாங்கி சாப்பிட வேண்டும்.அன்னைக்குன்னு பார்த்து ரெயிலில்  ஒரு ஆகாரம் கூட வரவில்லை. பகல் பூர முழுப்பட்டினி தான்.
நேரம் ஆகஆக மனைவிக்கு காலையில கொடுத்த. மாத்திரையின் வீர்யம்  குறைய ஆரம்பிக்கத் தொடங்கியது.நாங்க எங்க இருக்கோம் எனப் பார்த்தால் , இன்னும்  அரைமணியில் பூனாவை அடைவோம் என கைபேசி உணர்த்தியது. இரவு தாண்டணுமே எனக் கவலை. இந்தமாதிரி சமயத்தில் யாரிடம் உதவி கேட்கலாம் என யோசித்து, சென்னையில் உள்ள தம்பியைத் தொடர்பு கொண்டேன்.  அவன் உடனே 138 என்ற எண்ணைத் தொடர்பு கொள். அவர்களிடம் விஷயத்தை கூறு என்றான்.
அதே மாதிரி 138 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டவுடன், எல்லா விவரங்களையும் கேட்டு, PNR எண்ணையும் கேட்டு கவலைப்படாம இருக்கச் சொன்னார்கள். பூனா ஸ்டேஷன்  வந்ததும் எங்க போகியை விஜாரித்துக்கொண்டு ஒரு டாக்டர் வந்தார். தீர விஜாரித்து விட்டு மூன்று மாத்திரைகளையும் சக்கரை, உப்பு கலந்த பொடியைக் கொடுத்து, எல்லாம் சரியாகிவிடும் கவலைப்பட வேண்டாம் எனத் தைரியம் சொல்லிவிட்டு சென்றார். டாக்டருக்கு நன்றியைச் சொல்லிவிட்டு மாத்திரைகளை எடுத்துக் கொண்டார்கள் என் மனைவி. அன்று இரவு நிம்மதியாத் தூங்கினார்கள்.
ரயிலில் செல்லும் போது நாம எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டிய நம்பர்138. அவசரத்துக்கு உதவும் நண்பர்களே