பெட்டியை தள்ளிண்டு வெயிட்டிங் அறை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருந்தோம். “வாங்க சார், ஆட்டோல கோலாப்பூர் கூட்டிண்டு போறேன். யாத்ரி நிவாஸுக்கு அழைத்து செல்கிறேன். கோவிலைச் சேர்ந்தவங்கதான் நடத்தறாங்க. ஆட்டோவுக்கு 60 ரூபா கொடுங்க “ என்று தமிழிலும் மராட்டியத்திலுமாக பேசி ஓரு ஆட்டோ ஒட்டுனர் ஆசை வார்த்தைகனக் கூற நாங்களும் மயங்கி ஆட்டோவில் எறினோம். போறபோதே நான் எல்லா இடங்களுக்கும் கூட்டிக்கொண்டு போகிறேன். நிறைய இடம் பாக்க இருக்கு சார்” என சொல்லிக்கொண்டு வந்தார் ஓட்டுநர். கடைசியா ஓரு வீட்டு வாசல்ல கொண்டு போய் நிறுத்தி இது தான் யாத்ரி நிவாஸ், இறங்குங்க சார் என்றார் ஆட்டோ ஒட்டுநர்.
“என்னப்பா யாத்ரி நிவாஸ்ன்னு சொல்லிட்டு, வீட்டுல கொண்டு வந்துருக்கே” என்றோம். வீட்டு வாசல்ல போர்டு பாருங்க சார் என்றானே பாக்கணும். ஆமாம், நீங்களும் பாருங்க.
அந்த வீதியில் எல்லா வீடுகளையும் லாட்ஜா மாத்தியிருக்காங்க. படுத்துக்க கட்டில், பாத்ரூம், லெட்ரின் என பேசிக்கான ஐட்டங்களை வைத்து ரூமா மாத்திட்டாங்க. என்ன வாடகைன்னு விஜாரித்தோம் .”800 ரூபாய் வாடகை. எத்தன நாள் தங்கப் போறீங்க எல்லா நாளுக்கும் சேர்த்து மொத்தமா வாடகை முன்னாலயே கொடுக்கணும் “
அப்பவாவது ஆட்டோ டிரைவரப்பத்தி சுதாரிச்சுண்டு இருக்கணும். இன்னும் எப்படி ஏமாந்தோம்ன்னு பாருங்க.
நான் இந்த மாதிரி கோவில்களுக்குப் போகும் போதெல்லாம் அந்த கோவில் ஆட்சியாளர்கள் ஏதாவது தங்கும் விடுதிகள் நடத்துகிறார்களா, முன் பதிவு செய்யமுடியுமா என்பதையெல்லாம் முன்னாலேயே பார்ப்பவன் தான். அப்படிப்பார்த்தபோது கோவில் நிர்வாகம் நடத்துவதை பார்த்து இருந்தேன். ஆனால் முன் பதிவு செய்யமுடியாது என்று சொல்லியது. எனவே ஆட்டோ டிரைவர் யாத்ரி நிவாஸில் கொண்டு விடுகிறேன் என்றவுடன் மயங்கி விட்டேன்.
ஆனால் கோலாப்பூர் கோவில் நிர்வாகம் தங்கும் விடுதி நடத்துகிறது. அதன் அட்ரஸ் அறை வாடகை போன்றவற்றை உங்களுக்காக கீழே கொடுத்துள்ளேன். யாருக்காவது பயன்படும். தனிநபர், அல்லது குரூப்பா செல்பவர்கள் கூட கோலாப்பூர் போய்ச் சேர்ந்த பிறகு அறைகளை வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம்.
அறை கூட கோவிலில் இருந்து அருகில் தான் உள்ளது. இதை நாங்க நன்றாக ஏமாந்த பிறகு மறுநாள் மாலை தான் பார்த்தோம்.
வேறே எப்படி சார் ஏமாந்தீங்க. கேட்பது காதுல விழறது.
தொடர்ந்து படிச்சீங்கன்னா உங்களுக்கே தெரியும்.
அருமை
பதிலளிநீக்கு