செவ்வாய், 28 ஏப்ரல், 2020

பயணக் கட்டுரை கோலாப்பூர் பகுதி 7


என்ன ஷாக்ன்னு கேட்குறீங்களா?
இல்லையா பின்ன, ஆட்டோ நண்பர் லாட்ஜ் வாசல்ல இன்னொரு கோஷ்டியோட பேசிகிட்டு இருக்கார். எங்கள பாத்தவுடன் “ வாங்க சார் உங்கள. ரண்கலா லேக்ல கொண்டு விட்டுறேன். அப்புறம் இவங்களோட பேசிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு எங்க பதிலுக்கு வெயிட் பண்ணாம ஏறச்சொன்னார். நாங்களும் ஏதோ காரியம் ஆனா சரி, இன்னொரு இடத்தையும் பாத்த மாதிரி இருக்கும்ன்னு  ஏறி உக்காந்தோம். ரெண்டு நிமிஷத்துல வந்துட்டது. லேக். ஆமா, நாங்க தங்கிய லாட்ஜ் ஒரு பக்கம் கோவில் மறுபக்கம் லேக்.  ஏமாத்துறாங்க பாருங்க. 
சரி லேக்க பாப்போம்ன்னு இறங்கி பாக்கிறதுக்குள்ள ஆள் அப்ஸ்காண்டிங். ஒண்ணுமில்ல லேக். அந்த ஊர்க்காரங்க காலைல வாக் போற இடம்  அவ்வளவுதான்.  ஒரு போட்டோ எடுத்துக்கொண்டு நண்பருக்கு போன் செய்தோம்.
  பதில் இல்லை. இதுக்கு நடுவில பக்கத்துல இருந்த ஆட்டோ டிரைவரிடம் நாங்க பாக்க வேண்டிய லிஸ்ட கொடுத்து இதெல்லாம் பாக்க எவ்வளோ ஆகும் எனக் கேட்டோம்.
Mahalaxmi Temple
Rankala Lake
Chhatrapati Shahu Museum
Maharaja’s Palace
Kopeshwar Temple
Binkhambi Ganesh Temple
Jyotiba Temple
Bhavani Mandap
Panhala Fort  இதுதான் நாங்க கோலாப்பூர்ல பாக்க வேண்டிய இடங்கள்.  இதுல கோபேஷ்வர் 80 கிலோமீட்டர் தொலைவு. அதுக்கு ஒரு நாள் ஆகும். மற்றவைகள் மட்டும்ன்னா 500 கொடுங்க”, என்றார். நாங்க 800 பேசி,ஏமாந்து இருக்கோம். இதுல வேடிக்கை  என்னன்னா சில இடங்கள் வெகு அருகாமையில் உள்ளவை. சரி போனது போகட்டும், ஆட்டோ நண்பர் வந்தவுடன் மற்ற எல்லா இடங்களையும் பார்த்து விடுவோம் என நினைத்து,லாட்ஜ் நோக்கி நடக்கலானோம்.  பாதி வழியிலேயே ஒரு பைக்,ஆட்டோ  என இரண்டும் வந்தன. பைக்கில் ஆட்டோ நண்பர் . “ சாரி சார், இனிமேல் இது மாதிரி நடக்காது. இந்த ஆட்டோவில் என் தந்தை உள்ளார். அவர் இனி எல்லா இடங்களையும் தொடர்ந்து காண்பிப்பார்” என்று கூறி அந்த ஆட்டோவில் ஏற்றி விட்டு அவரிடமும் ஏதோ சொல்லி  எங்களைக் கிளப்பி விட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக