மொத்தமா வாடகையை வாங்கிக் கொண்டு அறைச் சாவியை எங்களிடம் கொடுத்தார் வீட்டு ஒனர். மணி 4.15. விட்டால் போதும் என்றாகியது. ஆட்டோ நண்பர், அப்போதைக்கு மட்டும், “ சரி சார் நீஙக ரெஸ்ட் எடுத்துக்கங்க, நான் 7 மணிக்கு வந்து எல்லா இடங்களையும் காண்பிக்கிறேன். அப்போ வாடகையை வாங்கிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு சிட்டாகப் பறந்தார். வென்னீர் 6 மணிக்குத் தான் வரும் எனச் சொன்னதால், அலாரத்தை வைத்துவிட்டு தூங்கினோம்.
கோலாப்பூர் விழித்தது, நாங்களும் தான். வாசலில் ஏதோ சப்தம் வருதே என்று கதவைத் திறந்து பாத்தா, நம்ம நண்பர், அதாங்க ஆட்டோ நண்பர் இன்னொரு கூட்டத்தை ரயில் நிலையத்தில் இருந்து லாட்ஜ்க்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தார். அப்பத் தான் பொறி தட்டியது.(!!!!!!!!)
“என்ன சார் 7 மணிக்கு வந்துடுவா” என்றார். “சரி வந்திடுங்க” என்று கூறிவிட்டு காலைக்கடன் கழிக்கச் சென்றேன். எல்லா வேலைகளையும் முடித்து விட்டு, சுமார் 7 மணி இருக்கும், கோவிலுக்கு முதலில் போய்விட்டு வந்துவிடுவோம் என்று நினைத்த மாத்திரத்தில், கதவைத் திறந்தோம். அதுக்கு முன்னால இந்த ஊர்ல எதெல்லாம் முக்கியம் என்று ஓரு லிஸ்ட் தயார் செய்து வைத்து இருந்தோம். இவற்றை ஆட்டோ நண்பரை வச்சுண்டு பாத்துடலாம் என்று தீர்மானித்தோம்.
கதவைத் திறந்தால் ஆட்டோ நண்பர். அவரிடம் லிஸ்ட காண்பித்து இவைகளை எல்லாம் பாக்க எவ்வளவு ஆகும் என வினவினோம்.இதற்குள் ஆர்டர் செய்த காபி (ஆறின காபி தான்) வர, நாங்க கொடுத்த லிஸ்ட் பாத்துட்டு எல்லாத்தையும் காண்பிக்கிறேன் சார். லிஸ்டுல சில இல்லை அவற்றையும் காண்பிக்கிறேன். 1000 ரூபாய் கொடுத்து விடுங்க என்றார். நமக்குத் தான் பேரம் பேசியே பழக்கமா, அதெல்லாம் இல்லை 700 கொடுக்கிறோம் என்றோம். இருவருக்கும் பேச்சுவார்த்தை முடிவில் 800க்கு ஓத்துக் கொண்டார்.”ஏறிக்ங்க, கோவில்ல கொண்டு விடுகிறேன்” ஏறி உட்காரத் தான் நேரம் ஆச்சு.” கோவில் வந்து விட்டது. கோவில நன்னா சுத்திப் பாருங்க “என்றார் இவ்வளவு கிடடத் தான் கோவிலா?என்று எங்களுக்குள் வினவிக்கொண்டே கோவில் லாசலைநோக்கி நகர்ந்தோம்.
ஆம், நாங்க தங்கியிருந்த இடத்தில் இருந்து நடக்கற தொலைவில் தான் கோவில். கோவிலுக்கு நான்கு பக்கமும் வாசல்.நாங்க நுழைந்த வாசலில் நிறைய கடைகள். நம்ம ஊர்ல இருக்கிற மாதிரி ராஜகோபுரம் இல்லை. உள்ளே நுழையும் போதே ஸீமஹாலக்ஷ்மி தரிசனம் தெரியுற மாதிரியா அம்மள் தரிசனம் எல்லோருக்கும் கிடைக்கிறது. சின்னகோவில் தான். நாங்க போன. தினம் வேலைநாளா இருந்ததாலே அதிகமா கூட்டம் இல்லை. வரிசையும் அதிகமா இல்லாததால வேகமா முன்னேறிச் சென்று தேவியின் தரிசனம் கிடைத்தது. நாம பாத்துக்கொண்டிருக்கும் போதே அம்மனுக்கு வேண்டிக்கொண்டு புடவை வாங்கி கொடுத்தவர்களிடம் இருந்து புடவையை அம்மனுக்கு அணிவிக்கிறார்கள்.சில நொடிகளில் அணிவித்து பிரசாதம் கொடுத்து விடுகிறார்கள். பக்தர்கள் நீண்ட நேரமா நிற்பதில்லை. அம்மனை சுற்றிவர ஏதுவாக கோவில் எண்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. நாங்க நீண்ட நேரமா நின்னாக் கூட யாருமே போங்கன்னு விரட்ல. பிரதக்ஷ்ணமா வந்தோம். நிறைய சன்னதிகள், எல்லாவற்றையும் சேவித்துக் கொண்டோம். அருகிருந்து சேவிக்க, கொஞ்சம் தள்ளி நின்னு சேவிக்க என நல்ல ஏற்பாடு செய்துள்ளார்கள்.கோவிலுக்கு உள்ளேயே விளக்கேற்ற நிறைய. தூண்கள் பிரம்மாண்டமமா உள்ளன.
ரொம்ப நாழிகை இங்கேயே இருந்தால் மற்றவகைகளை பாக்க முடியாக போய்விடும் என்று தீர்மானித்து வெளியே வந்து ஆட்டோ நண்பனை தேடினோம். ஹும், எங்கும் காணவில்லை. போன் பண்ணேன், “இதோ வந்துட்டேன் சார். அதுக்குள்ளே காலை டிபன் முடித்து விடுங்க “என்றார். ரோட்டுலேயே நன்கு அலங்கரித்துக் கொண்டு பெண்கள் அவர்கள் குழந்தைகள் புடை சூழ டிபள் சுடச்சுட வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். விலையும் குறைவாக இருந்ததால் டிபனை முடித்துக்கொண்டோம்.ஆட்டோ நண்பர் வர வழியாக தெரியாததாலும் அறை அருகில் தானே அறையை நோக்கி நடக்கலானோம். லாட்ஜ் வாசலில் பாத்தால் ஷாக்!!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக