ஞாயிறு, 3 மே, 2020

பயணக் கட்டுரை கோலாப்பூர் பகுதி 10

அடுத்து எங்கள புதிய அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். 
கோலாப்பூர் மக்கள் அந்த ஊர் மஹாராஜாவுக்கு நல்ல மரியாதை செய்கிறார்கள்.பழைய அரண்மனை ஸீ மஹாலக்ஷ்மி கோயில் அருகாமையில் உள்ளது. பேருக்குத் தான் புதிய அரண்மனை. ரொம்ப பழைமையாகத்தான் உள்ளது. உள்ளே செல்ல கட்டணம் உண்டு. அரச வம்சத்தினர் பயன்படுத்திய பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளார்கள் வேகமாக பார்த்துவிடலாம். சாஹு மஹராஜ் அரண்மனை என்று பெயர்.
இதற்குள் பகல் 2 மணியாகிவிட்டது. நண்பரை எங்காவது ஹோட்டல் இருந்தால் நிறுத்துங்கள் என்று சொன்னோம். கவலைப் படாமல் அந்த ஊர நடிகரின் வீடு, பிள்ளையார் கோவில், 
யாரோ சாமியார் ஆஸ்ரமம் இப்படி பசி நேரத்தில் காண்பித்ததை எல்லாமே பார்க்க இஷ்டப்படாமல் பார்த்தோம். மதியம் 3 மணியளவில் எங்களை லாட்ஜில் கொண்டுவிட்டார். அப்பாடா என்று இருந்தது. பேசியபடி எல்லாவற்றையும் காண்பிக்க முடியவில்லை. எச்சரிக்கை கோலாப்பூர் போகும் நண்பர்கள் ஆட்டோ ஓட்டுநர் வசம் கவனமாக இருக்கவும்.
சிறிது நேரம் ஓய்வுக்கு பின் மீண்டும் ஸீ மஹாலக்ஷ்மியை தரிசிக்கக் கிளம்பினோம். முன் சொன்னபடி நடந்தே கோவிலுக்கு வந்நோம். நல்ல தரிசனம். கோவில் மாலை நேரத்தில் ஜொலித்தது. வண்ண விளக்குகளின் அலங்காரத்தில் கோபுரம், தீபம் ஏற்றும் ஸ்தம்பம் ஆகியவை ஜொலித்தன.
பவானி மண்டபம் ஸீமஹாலக்ஷ்மி கோவிலுக்கு அருகிலேயே உள்ளது. இது பழைய அரண்மனை ஆகும். சாஹு மகராஜ் அவர்களின் ஆளுயுர சிலை வைத்துள்ளார்கள் அவர் வேட்டையாடிய பொருட்களை காட்சியாக வைத்துள்ளார்கள். சாஹு மஹராஜ் வழிபட்ட பவானி விக்ரஹம் உள்ளது. நல்ல விஸ்தாரமான இடம். அந்த இரவு நேரத்தில் ஸீமஹாலக்ஷ்மி கோவில் கோபுரங்கள் பல வண்ண விளக்குகளால் மின்னுகிறது. பார்க்க ரம்மியமாக காட்சியளிக்கிறது.
அந்த ஊரின் விஷேஷம் என்ன என்று விஜாரித்ததில் செருப்பு முக்கியமா சொல்றாங்க. எத்தனை தேய்த்தாலும் கரையாது. வளையல்கள் பார்க்க ஆசையைத் தூண்டுகிறது  நாங்க பாக்காம விட்டது , கோலாப்பூர் மல்யுத்தத்துக்கு புகழ் பெற்றதாம். அதற்கென அரங்கம் எல்லாம் வைத்து வீரர்கள் தயார்படுத்தப்பட்டு ஒலிம்பிக் வரை செல்கிறார்களாம்.
நீங்க அடுத்தமுறை சென்றால் இலைகளை ஞாபகம் வைத்துக்கொண்டு பாருங்க. ரெண்டு நாள் தங்கிப் பாருங்க. கோலாப்பூர் அருகில் பாக்க வேண்டிய இடங்கள் பற்றி கோவிலில் போட்டோ மற்றும் எப்படி செல்வது என்பது பற்றி விளக்கமா வைத்துள்ளார்கள்.  கோவிலுக்கு அருகாமையில் சிவன் கோவில் மார்க்கெட்டுடன் இணைந்து உள்ளது. அதே போல நந்தி உள்ளேயும் சிவலிங்கம் வெளியேயும் என ஒரு கோவில் உள்ளது.
நாங்க ஸீரங்கம். அதனால் அடுத்த நாள் காலை ஒரு தடவை ஸீமஹாலக்ஷ்மியை சேவித்தோம். எங்களுக்கு காலையில் திருப்பதி வழியாக ரமில் காலையில் ஏறினோம் மறுநாள் காலை திருப்பதி வந்தோம். ஒரு மணி நேர இடைவெளியில்  விழுப்புரம் வழியா மறுநாள் இரவு ஸீரங்கம் வந்து சேர்ந்தோம். மறக்க முடியாத அனுபவம். பார்ப்போம் ஸீமஹாலக்ஷ்மி மீண்டும் எப்போது கூப்பிடுகிறார் என்ற எதிர்பார்ப்போடு ,அடுத்த பயணத்தில் எல்லோரா மற்றும் அஜந்தா பற்றி எழுதுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக