வியாழன், 9 ஜூலை, 2020

கைலாசா பகுதி 1

எல்லோரா பகுதி 1
கணவனுக்கு மனைவி கட்டிய தாஜ்மஹால் (கோயில்).!!!!!
உலக அதிசயங்களில் தாஜ்மஹாலைப் பற்றிப் பேசாதவர்கள் இல்லை. ஆனால் இங்கயே இந்தியாவில், கணவனுக்கு மனைவி கட்டிய தாஜ்மஹாலை விட சிறந்த கட்டிடம், ஏன் கோயில் என்றே கூறலாம், ஒன்று எத்தனை பேருக்கு தெரிஞ்சு இருக்கும்!!!
தாஜ்மஹால் ஒன்றும் காதல் ஓவியமாக இருக்க முடியாது!!! ஏன் தெரியுமா?
அவன் ஒண்ணும் காதல் மன்னன் அல்ல. அதே போல மும்தாஜ்பேகம் ஒன்றும் ஷாஜஹானின் முதல் மனைவியல்ல. மும்தாஜும் முன்னரே மணம் ஆனவள் தான். இது இரண்டாம் கல்யாணம். பத்து பிள்ளைகளை பெற்று, பதினொன்றாவது பிரசவத்தில் மரித்துப் போனவருக்குத் தான் தாஜ்மஹால் கட்டினாராம் ஷாஜஹான். அதைவிட அந்த இடத்தில் ஏற்கனவே இந்து கோவில் இருந்தது என்று சொல்பவர்கள் நிறையப் பேர் உண்டு!!!!!
இப்படி எல்லாவற்றிலும் முரண். அதனைப் பார்க்கும் போது கணவனுக்கு கோயில் கட்டினதைப் பார்த்தால் தாஜ்மஹால் ஒன்றும் பெரியதில்லை.
யார்ய்யா அது?
ஆம், காதல் கணவனுக்கு கட்டியது தான் கைலாசா கோவில்.
சரித்திரத்தை சற்று பின்னோக்கிப் பார்ப்போம்.
7ம் நூற்றாண்டு. ராஷ்ட்ரகூட மன்னர்கள் இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த நேரம். மன்னர்களின் வரிசையில் கிருஷ்ணா I என்ற பெயரில் அரியணையில் இருந்தார். அரசருக்கு உடல்நலம் சரியில்லை. அவரின் மனைவி,, பொறுப்பேற்றுக் கொண்டு நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் மிகச் சிறந்த வைத்தியர்களை வரவழைத்து, மன்னரின்  உடல்நலம் தொடர்ந்து முன்னேராரது குறித்து ஆலோசனைகள் செய்தார். வெவ்வேறு மருந்துகள் கொடுத்தும் மன்னரின் உடல்நலமாகவில்லை.
திக்கற்றவர்களுக்கு கடவுள் தான் துணை என்பது போல், அரசியார் கிரிஷ்னேஸ்வரில் உள்ள சிவனை (எலப்புரா, தற்போதைய எல்லோரா) வேண்டினார்.
என்ன வென்று கேளுங்க?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக