வெள்ளி, 1 மே, 2020

பயணக் கட்டுரை கோலாப்பூர் பகுதி 9

 ஃபன்ஹாலா கோட்டை, கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எங்க ஆட்டோ ஒட்டுனர்  ஜோதிபா கோயிலில் இருந்து நேராக இந்ந மலைக்கு ஒட்டி வந்தார். ஆம்,  இந்த கோட்டை இன்னொரு மலையில் உள்ளது.
 காலத்தின் கோலத்தில் நிறைய சிதிலமடைந்து உள்ளது.
7 கிலோமீட்டர் சுற்றளவுடன், பெரிய கதவுகளுடன், அங்கங்கே சிப்பாய்கள் தங்க, பெரிய மதிலுடன் தூரத்தில் இருந்து பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது. 12ம் நூற்றாண்டில் போஜ ராஜாவால் கட்டப்பட்டு பின்னர் வெவ்வேறு மன்னர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். சிவாஜி கொஞ்ச நாட்கள் இந்த கோட்டையைப் பயன்படுத்தி இருக்கிறார். கோலாப்பூர் மஹாராணி கொஞ்ச நாட்கள் இங்கிருந்து ஆண்டிருக்கிறார்.
இங்க பாக்க வேண்டிய இடங்கள்,  
தீன் தர்வாசா என்று சொல்லப்படும் மூன்று வாசல், கோட்டை எதிரிகளால் வெளியில் சூழப்படும் போது உள்ளேயே மக்கள் உயிர் வாழத் தேவையான ஆகாரங்களைச் சேர்த்து வைப்பதற்கான இடம், நாட்டுக்கு துரோகம் இழைப்பவர்களை மேலிருந்து தூக்கி கீழே போடுவதற்கான இடம், அவசரத்திற்கு நாட்டை விட்டு செல்ல நேரிடும்எனில் அதற்கான வழி ஆகியவை ஆகும்.
அவற்றையெல்லாம் ஆட்டோநண்பர் நன்கு காண்பித்தார்.

கோலாப்பூர் செல்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடம் பன்ஹாலா கோட்டை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக