திங்கள், 20 ஜூலை, 2020

எல்லோரா. பகுதி 3. கொசாகா என்ன செய்தான்?

எல்லோரா. பகுதி 3. கொசாகா என்ன செய்தான்?
கொசாகா மிகச் சிறந்த கட்டிடக்கலை வல்லுனர். அவரிடம் மிக அதிகமான கட்டிடக்கலை நிபுணர்கள் வேலையில் இருந்தார்கள்.
தான் செய்யப் போகும் வேலையை மன்னரிடம் எடுத்துரைக்கிறார்.
“மன்னரே, நான் அரசிக்காக கட்டப்போகும் கோயில் எல்லோரும் கட்டுவது போல கீழிருந்து அல்ல. .இதற்கென ஒரு மலையை தேர்ந்தெடுத்துள்ளேன். அதனை மேலிருந்து உளி போன்றவற்றைக் கொண்டு தேவையில்லாத கற்களை எடுத்து விட்டு, முதலில் கோபுரம், பின்னர் ஒவ்வொன்றாக உருவாக்கப் போகிறேன். இதில் எந்த இடத்திலும் வேறே பொருட்கள் பயன்படுத்தப் படமாட்டாது. கோபுரம் ஒரே வாரத்தில் அரசிக்காக உண்டாக்கிவிடுவேன். அரசியும் தன்னுடைய உண்ணா நோன்பினை முடித்துக்கொள்ளலாம்.” ஆச்சர்யத்தில் முழுகினான் அரசன்.
சொன்னபடி வேலையைத் துவக்கினான் கொசாகா.
எல்லோரையும் போல கோயில் கீழிருந்து மேலே கட்டாமல், மேலிருந்து கீழே செல்ல ஏதுவாக சிறந்த மலையைத் தேர்ந்தெடுத்தான் கொசாகா. தேவையில்லாத கற்களை உளி கொண்டு நீக்கினான். சிறிதுசிறிதாக கோபுரம் உருவாகியது. சொன்னபடி ஒரே வாரத்தில் கோபுரம் உருவாகி, அரசியார் பார்த்தார். அசந்து போனார். கோபுரமே இப்படி உருவானால் கோயில் எப்படி உருவாகும்!!!! 
“மணீகேஷ்வர்,” ஆம் அது தான் அந்த கோயிலுக்கு பெயர். அது தான் அரசியாரின் பெயரும் கூட. சிவனின் கோபுரத்தைக் கண்ட அரசியாரும் தன்னுடைய உண்ணா நோன்பினை முடித்துக் கொண்டார்.
இப்படியாக ஆரம்பிக்கப்பட்டது  தான் தற்போது மஹாராஷ்டிராவில் அஹமதாபாத் அருகில் உள்ள எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயில்!!!!!!! அதனைப் பார்த்த பிறகு சொல்லுங்க தாஜ்மஹால விட இது பன் மடங்கு பெரிசு தானே!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக